அனைத்து மாணவர்களுக்கும் கல்வி அமைச்சின் அறிவிப்பு
கொரோனா வைரஸின் காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள காரணத்தால், விடுமுறை காலத்தில் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்காக கல்வி அமைச்சினால் இணைய கல்விக்கூடம் www.e-thaksalawa.moe.gov.lk என்ற இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் 1 முதல் தரம் 13 வரையான அனைத்து பாடத்திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு e-பாடங்கள் மற்றும் மேலதிக வாசித்தல் கையேடுகள், e-புத்தகசாலை, சிங்கள-தமிழ் அகராதி, பெரியார்களின் சுயசரிதை, வினாத்தாள்கள் (தரம் 1-11க.பொ.த.சா.தரம் /உயர்தம் கடந்தகால வினாத்தாள்கள் /மாதிரி வினாத்தாள்கள் ), பொழுதுபோக்கு அம்சங்கள் (கல்விசார் விளையாட்டுக்கள்/ பாடல்கள்), பிரிவெனாவிற் குறிய பாடங்கள், விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பாடங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
-
PrevoiusYou are viewing Most Recent Post
-
Next
No Comment to " அனைத்து மாணவர்களுக்கும் கல்வி அமைச்சின் அறிவிப்பு "